அறிவிப்பாளர்: ரிஃபாஆ (ரலி) பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''தம்முடைய வாணிபத்தில் இறையச்சத்துடன் (இறைக்கட்டளைகளை மீறாமல்) நடந்து கொண்டவர்கள், நன்மையை மேற்கொண்டவர்கள் (மக்களின் உரிமைகளை முழுமையாகத் தந்தவர்கள்) வாய்மையைக் கடைப்பிடித்தவர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர மற்றெல்லா வணிகர்களும் மறுமை நாளில் தீயொழுக்கமுடையோராகவே எழுப்பப் படுவார்கள்.''(திர்மிதி)அறிவிப்பாளர்: அபூகதாதா(ரலி)பெருமானார்(ஸல்) அவர்கள் (வணிகர்களுக்கு எச்சரிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்:'உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.''(முஸ்லிம்)விளக்கம்: வியாபாரி ஒரு பொருளைக் குறித்து இதுதான் அதற்குரிய விலை; இப்பொருள் தரமிக்கது; நயமானது என்று சத்தியமிட்டு உத்தரவாதமளித்தால், அப்போதைக்கு வேண்டுமானால் அவருடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கி மக்கள் அப்பொருளை வாங்கிவிடக் கூடும். ஆனால், உண்மை வெளிப்படும்போது எவருமே அவருடைய கடையின் பக்கமே திரும்பியே பார்க்க மாட்டார்கள். பிறகு அவருடைய வியாபாரம் மந்தமாகி இறுதியில் சீரழிந்து போகும். எனவே தான் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Response to "சத்தியம் செய்ய வேண்டாம்"
கருத்துரையிடுக